Categories
உலக செய்திகள்

அரண்மனை, கோட்டையை… ”வெறும் ரூ.87.98க்கு விற்ற”…. மகன் மீது இளவரசர் வழக்கு …!!

ஜெர்மன் நாட்டின் இளவரசர் எர்ன்ஸ்ட் ஆகஸ்ட் தன் மகன் மீது கோடிக்கணக்கான மதிப்புடைய கோட்டையை 1 யூராவுக்கு விற்றதற்காக வழக்கு பதிவு செய்துள்ளார் .

ஜெர்மன் நாட்டின் 66 வயதான இளவரசர் எர்ன்ஸ்ட் ஆகஸ்ட் தன் மகனான எர்ன்ஸ்ட் ஆகஸ்டு பெயருக்கு மரியன்பர்க் கோட்டை மற்றும் காலன்பர்க் தோட்டத்தை 2000ஆண்டு கால கட்டத்தில்  மாற்றியுள்ளார். ஆனால் தன் மகனோ  கோடிக்கணக்க்கிலான மதிப்புடைய அந்த கோட்டையை வெறும் ஒரு யூரோவுக்கு அதாவது ரூபாய் 87.98 அரசாங்கத்திற்கு விற்றுள்ளார். இதனால் இளவரசர் எர்ன்ஸ்ட் ஆகஸ்ட் தன் மகன் ஆகஸ்டு மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல்  தன் மகன் மீது குடும்பத்தில் உள்ள விலையுயர்ந்த பல பொருட்கள் மற்றும் கலைப்படைப்புகளை தவறான முறையில் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த கோட்டையை சீரமைக்க GBP 23 மில்லியனுக்கும் அதிகமாக செலவாகும் என்று கூறப்படுகிறது. இந்த கோட்டையை பார்ப்பதற்கே ஆண்டுதோறும் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருவார்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு இறுதியில் இளவரசர் ஆகஸ்ட் நீதிமன்றத்தை அணுகி காலன்பர்க் மேனர்  வீடு ,மரியன்பர்க் கோட்டை மற்றும் ஹெறேன்ஹவுசனில்  உள்ள அரச  சொத்தை பரிசாகக் கொடுத்த முடிவை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார். ஜெர்மன் இளவரசர் தற்போது ஆஸ்திரியாவில் வசித்து வருகிறார். அவரின் சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 5 மில்லியன் யூரோக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |