திருப்பூர் அருகே ஆசிரியர் திட்டியதால் பத்தாம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் குமார் அவருடைய மகன் தேவா மணிகண்டன் (16) வசித்து வருகிறார்கள். தேவா மணிகண்டன் அங்கு அண்ணா நகர் பகுதியில்உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தேவா மணிகண்டன் வகுப்புகளில் சரியாக படிக்கவில்லை. அதனால் அவரின் வகுப்பு ஆசிரியை தேவா மணிகண்டனின் தந்தையை பள்ளிக்கு வரவழைத்து உங்கள் மகன் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்று தெரிவித்தார். தேவா மணிகண்டன் மிகவும் வருத்தம் அடைந்தார்.
அன்று மாலை பள்ளி முடிந்ததும் வருத்தத்துடன் வீடு திரும்பிய தேவா மணிகண்டன் வீட்டிற்குள் நுழைந்து தன் தந்தையிடம் படிக்க செல்கிறேன் என்று கூறி அறைக்குள் சென்று பூட்டி கொண்டார். சில மணி நேரங்கள் ஆகியும் கதவை திறக்காததால் சந்தேகத்துடன் அவரின் தந்தை கதவை தட்டினார். திறக்காததால் உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்றார். பிறகு தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த சம்பவம் பற்றி உடனடியாக அங்குள்ள திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேவா மணிகண்டனின் தற்கொலைக்கு முழுக்காரணம் பள்ளி நிர்வாகம் தான் என்றும் அவரின் வகுப்பு ஆசிரியை என்றும் போலீசாரிடம் கூறினார்.
அதன்பிறகுமாணவனின் பெற்றோர், உறவினர்களை அழைத்து சென்று நேற்று காலை பள்ளிக்கு முன் பெரும்போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அதேசமயம் மாணவன் தற்கொலை குறித்து பள்ளி நிர்வாகத்தில் ஒருவர்கூட விசாரிக்கவில்லை என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.