பணம் வைத்து சூதாடிய 15 வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான காவல்துறையினர் அத்திமரப்பட்டி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் 15 பேர் கொண்ட குழு பணம் வைத்து சூதாடியதை கண்டுள்ளனர்.
உடனே காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் அப்பகுதியில் உள்ள சின்னசாமி, லட்சுமணன், சர்க்கரை ராஜா, முருகன், வடிவேல், சதீஷ்குமார் உள்பட 15பேர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த 15 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 8 மோட்டார் சைக்கிள்களையும் 1500 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.