Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இனிமேல் இப்படி பண்ணாதீங்க… இது சட்டபடி குற்றம்… 2 பேர் மீது அதிரடி நடவடிக்கை…!!

பனை மரத்திலிருந்து கள் இறக்கி விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கண்ணிகாபுரம், பொண்ணமங்கலம், சஞ்சீவ்புரம் ஆகிய பகுதிகளில் பனை மரங்களிலிருந்து கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசியும் வாழைபந்தல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியழகனும் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் மேற்குறிப்பிட்ட கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் கண்ணிகாபுரம் பகுதியில் பனை மரங்களில் இருந்து இறங்கிய கன்னியப்பன் மற்றும் சகாதேவன் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் பனை மரங்களில் மாட்டி வைக்கப்பட்டிருந்த 50 பானைகளை உடைத்து கள்ளை கீழே கொட்டி அளித்துள்ளனர்.

Categories

Tech |