தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்னும் சில நேரத்தில் தாக்கல் செய்ய இருக்கின்றார். தேர்தல் வர இருப்பதால் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்க கூடிய பட்ஜெட்டாக இது இருக்கும் என்பதால் தமிழகத்தின் கடன் 5 லட்சம் கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கவர்ச்சி அறிவிப்புகளால் தமிழக அரசுக்கு நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2016 – 2017ஆம் நிதி ஆண்டில் 2,52,431கோடி கடன்
2017 – 2018ஆம் நிதி ஆண்டில் 3,14,366கோடி கடன்
2018 – 2019ஆம் நிதி ஆண்டில் 3,55,844கோடி கடன்
2019 – 2020ஆம் நிதி ஆண்டில் 3,97,495கோடி கடன்
2020 – 2021ஆம் நிதி ஆண்டில் 4,56,000கோடி கடன்