Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் 5 நாட்களுக்கு… “தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்”… ஜோ பைடன் அறிவிப்பு…!!

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முக்கிய முடிவு ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்  உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. மேலும் பல நாடுகளில் கொரோனா புதிதாக உருமாற்றம் அடைந்ததுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே கொரோனாவுக்கு  எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில்,   மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு  வருகிறது.

இருப்பினும் உலகில் உள்ள சில ஏழை நாடுகளுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி அடுத்த ஆண்டில் தான் கிடைக்கும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,00,000 தாண்டியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 63,090,634 என்றும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,222,180 என்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,01,091 என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உட்பட  அங்கு செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும்  உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |