வடகொரிய அதிபருக்கு அமெரிக்காவின் முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் விமானத்தில் லிஃப்ட் கொடுக்க விரும்பியது பிபிசி ஆவணப் படம் மூலம் தெரியவந்துள்ளது.
அணு ஆயுத சோதனைகள் மூலம் உலக நாடுகள் மற்றும் வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் தேசமாக வடகொரியா திகழ்கிறது. இதன் காரணமாக வட கொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தும் சலைக்காமல் சாதூர்யமாக வடகொரிய அதிபர் கிம் சாங் சமாளித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப், கிங் ஜாங்கை சந்தித்து அணுஆயுதங்களை கைவிடும்படி கூறினார். அதன்பிறகு கடந்த 2019ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்ற அதிபர் கிம் ஜாங்கை, வடகொரியாவில் தனது விமானத்தில் இறக்கி விடுவதாக டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வு பிபிசி ஆவணப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் அதிகாரப்பூர்வ விமானமான ஏர் போர்ஸ் ஒன்னில் சென்றிருந்தார். இருப்பினும் வட கொரியா அதிபர் தன் தந்தை வழியை பின்பற்றி ரயிலின் மூலமாக பயணம் செய்தார்.
கிங் ஜாங்கை விமானம் மூலம் வடகொரியாவில் இறக்கி விடுவதற்கு முன்வந்த டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கைகளை கிங் ஜாங் ஏற்கவில்லை. ஒருவேளை அவர் கோரிக்கையை ஏற்று இருந்தால் அவர் ஏர் போர்ஸ் ஒன்னில் ஏறி சென்றிருப்பார். அப்படி சென்று இருந்தால் இந்த விமானம் வடகொரிய எல்லைக்குள் பயணிக்க வேண்டியது இருக்கும். இது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் என்றும் ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.