‘மெர்சல்’ பட கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் 65 வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே நடிகர் விஜய்யின் 66-வது படத்தை இயக்கப் போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
‘தளபதி 66’ படத்தை விஜய்யின் ‘மெர்சல்’ படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது . இந்நிலையில் ‘தளபதி 66’ படத்தை இயக்குனர் அட்லீ இயக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது . ஏற்கனவே அட்லி-விஜய் கூட்டணியில் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.