Categories
உலக செய்திகள்

கல்வான் தாக்குதலில்…. சீன வீரர்கள் மரணம்…. கேள்வி எழுப்பிய வலைப்பதிவர் கைது…!!

கல்வான் தாக்குதலின்போது சீன வீரர்களின் மரணம் குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த வலைப்பதிவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்வன் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய – சீன ராணுவ வீரர்கள் இடையே போர் நடைபெற்றுள்ளது. இப்போரில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததாக இந்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் சீன ராணுவம் முதலில் எந்த உயிர் சேதமும் இல்லை என்று கூறியுள்ளது. அதன்பின்னர் சீன அரசு சம்பவம் நடைபெற்று எட்டு மாதங்கள் கழித்து பிப்ரவரி 19 2021 அன்று தங்கள் படையில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து சமூக வலைதளங்களில் சீனவை சேர்ந்த யாங்கு என்ற வலைப்பதிவர்  போரில் இந்தியா 20 ராணுவ வீரர்கள் இறந்ததாக உடனே அறிவித்த போது சீனாவுக்கு மட்டும் ஏன் இதுகுறித்து  அறிவிக்க 8 மாதங்கள் ஆனது என்றும், இப்போரில் இந்தியா தான் வென்றதாகவே கூறிக்கொள்கிறதே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் சீன அரசு போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை இவர் அவமானப்படுத்தியதாகவும், தவறான தகவல்களை அளித்ததாகவும் கூறி அவரை கைது செய்துள்ளது.

Categories

Tech |