தமிழகம், மேற்கு வங்க மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் அறிவிப்பதற்கு முன்னரே மத்திய அரசு ஆயுதப் படையினரை அனுப்பப்பட்டது சர்ச்சையானது. இதையடுத்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் பகுதிகளுக்கு குறிப்பாக பதற்றமான பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக மத்திய ஆயுதப் படைகளை முன்கூட்டியே அனுப்புவது வழக்கம். இந்த நடைமுறை 1980 ஆண்டுகளிலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய ஆயுத படைகள் அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் முன்பு மத்திய ஆயுதப்படை அனுப்பி வைக்கப்பட்டது .
அசாம், கேரளா ,தமிழகம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரிக்கு மத்திய ஆயுத படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 5 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஆயுதப் படைகளை அனுப்பி வைக்கும் உத்தரவு அனைத்து மாநில தலைமைச் செயலரும், டிஜிபியும், தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு கடந்த பிப்ரவரி 16ம் தேதி அன்று அனுப்பப்பட்டது என்பதை ஊடகங்கள் தெரிந்துகொள்வது நல்லது என்று கூறியுள்ளது.