ப்ரட்ட் மற்றும் விட்னி4000-112 இன்ஜின் கொண்ட போயிங் 777 விமானங்கள் பிரிட்டன் வான்வெளியில் நுழைய தடை விதித்துள்ளது.
அமெரிக்காவுக்கு சொந்தமான ப்ரட்ட் மற்றும் விட்னி 4000-112 இன்ஜின் கொண்ட போயிங் 777 பயணிகள் விமானம் நடுவானில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விமானத்தை விமானிகள் பத்திரமாக தரை இறக்கப்பட்டு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமான நிறுவனம் கூறியது. இந்நிலையில் பிரிட்டன் நாட்டின் வான்வெளியில் ப்ரட்ட் மற்றும் விட்னி 4000-112 இன்ஜின் கொண்ட போயிங் 777 விமானம் நுழைய தடை என்று பிரிட்டன் விமான போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.
இந்த இன்ஜின்களை பிரிட்டன் விமான நிறுவனங்களில் பயன்படுத்துவதில்லை என்றும் கூறுகிறது. பிரிட்டன் விமான போக்குவரத்து கழகம், இந்த இஞ்சின்கள் அமெரிக்கா ,தென் கொரியா மற்றும் ஜப்பான் விமான நிறுவனங்கள் பயன்படுத்துவதாகவும் இதனை அந்நாட்டு அதிகாரிகள் நிறுத்தி விட்டதாகவும் கூறியுள்ளது.