Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. தவறிவிழுந்த பெண் தொழிலாளி மரணம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளிலில் சென்ற பெண் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் மகாத்மா காந்தி சாலை பகுதியில் வசித்து வந்த இந்திரா என்ற பெண்ணை சித்தாள் வேலைக்காக தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு, காஞ்சிபுரம் பகுதியில் ஒரு கட்டுமான வேலையை செய்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது மாகரல் காவல் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக தனது கட்டுப்பாட்டை இழந்தது. அதில் நிலைதடுமாறிய சங்கருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த இந்திராவிற்கு மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலே அவர் எதிர்பாராதவிதமாக இறந்து விட்டார். இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |