சியோமி நிறுவனத்தின் ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
சியோமியின் சமீபத்திய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக ரெட்மி 9 பிரைம் வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 9 மாடல் போன்ற அம்சங்களுடன் வெளிவந்துள்ள 6.53′ இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளேயுடன், வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி 80 SoC ப்ராசஸர், குவாட் ரியர் கேமரா அமைப்பு, அதில் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர், பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் அகச்சிவப்பு (ஐஆர்) பிளாஸ்டர் போன்ற கவனிக்கத்தக்க அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனானது ஸ்பேஸ் ப்ளூ, மின்ட் கிறீன், சன்ரைஸ் ஃப்ளேர் மற்றும் மேட் பிளாக் ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கிறது. குறிப்பாக விலையை பொறுத்தவரையிலும் ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன், பட்ஜெட்டுக்கு ஏற்ற ஒரு ஸ்மார்ட்போனாக பார்க்கப்பட்டது.
இந்த ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 பிரைம் மாடலுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 பிரைம் மாடலுக்கு ரூ.500 விலை குறைக்கப்பட்டு ரூ.9,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இப்போது அறிவிக்கப்பட்ட புதிய விலைகளில் அமேசான் மற்றும் எம்.ஐ.காம் தளங்களில் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.