அமெரிக்காவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கார் பேரணி நடத்தியுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள உழவர்கள் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிகம், உழவர்கள் ஒப்பந்தத்தின் மீதான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள், இன்றியமையாத பொருள்கள் ஆகிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ அருகில் மிஷன் சன் ஜோஸ் உயர்நிலைப்பள்ளி முன்பு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிப்ரவரி 22 அன்று “வந்தேமாதரம்” என்ற கோஷங்களை எழுப்பி கார்பேரணி நடத்தியுள்ளனர். இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் இந்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை நாங்கள் ஆதரிக்கிறோம், இது முன்னேற்றத்திற்கான பாதையாகும் என்று கூறியுள்ளனர்.