தமிழக இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக வெளிநடப்பு செய்தது. மேலும் பெட்ரோல் – டீசல் விலை மீதான வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்ய நிலையில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் சட்டப்பேரவையை புறக்கணித்து வெளியேற்றினர்.
அவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசிய போது,இது ஊழல் அரசு, உதவாக்கரை அரசு, இந்த அரசு நிதிநிலை அறிக்கையில் கலந்து கொள்ளாமல் திராவிட முன்னேற்றக் கழகம் வெளிநடப்பு செய்து இருக்கிறோம். மீண்டும் பொதுத் தேர்தல் நடக்கும்,
அந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றி மகத்தான வெற்றி பெறும். வெற்றி பெற்ற பிறகு எங்கள் தலைவர் தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற வரும் போது தான் நாங்கள் மீண்டும் சபைக்கு திரும்புவோம், இது எங்களுடைய திடமான முடிவு என துரைமுருகன் தெரிவித்தார்.