Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் புதிய “அம்மா விபத்து & ஆயுள் காப்பீடு திட்டம்”… வெளியான அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடும்ப தலைவர் இயற்கை மரணம் அடைந்தால் 2 லட்சம், விபத்தில் மரணம் அடைந்தால் 4 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் உரையில் புதிய காப்பீடு திட்டம் குறித்து ஓபிஎஸ் அறிவித்துள்ளார். எல்ஐசி மற்றும் யுனைடெட் காப்பீடு மற்றும் இந்தியா காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து ஏழை மக்களுக்கு புதிய ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு திட்டம் தொடங்கப்படும். அதற்கான தொகையை தமிழக அரசே ஏற்கும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் இருக்கும் குடும்பத்தலைவர் இயற்கை என்றால் இரண்டு லட்சமும், விபத்தில் மரணம் அடைந்தால் 4 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Categories

Tech |