Categories
உலக செய்திகள்

நேரலையில் புகுந்த கொள்ளைக்காரன்…. துப்பாக்கி காட்டி மிரட்டல்… வைரலாகும் வீடியோ…!

தொலைக்காட்சி நேரலையின் போது திடீரென வந்த கொள்ளைக்காரனால் பரபரப்பு ஏற்பட்டது.

தென் அமெரிக்காவின் ஈக்வடார் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று தனியார் செய்தி ஊடகத்தின் நேரடி ஒளிபரப்பு நடந்துகொண்டிருந்தது. அப்போது நேரடி ஒளிபரப்பு என்று கூட பார்க்காமல் ஒரு நபர் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோ தற்போது ட்விட்டரில் பதிவிடப்பட்ட வைரலாகி வருகிறது. அதில் அந்தத் திருடன், தொலைக்காட்சி குழுவினரிடமும், பத்திரிகையாளரிடமும் துப்பாக்கியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து ஸ்கை நியூஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நேரலையின்போது முகமூடி அணிந்து திடீரென வந்த கொள்ளைக்காரன் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.

அதன்பின் அனைவரிடமும் இருக்கும் பணத்தையும் தொலைபேசிகளையும் ஒப்படைக்குமாறு மிரட்டியுள்ளார். பின்பு அவர் இரு சக்கர வாகனத்தில் வந்த மற்றொரு நபருடன் தப்பித்துச் சென்று விட்டார். இவை அனைத்தும் நேரடி காட்சியின்போது வைக்கப்பட்டு இருந்த கேமராவில் பதிவு செய்யப்பட்டது.

இந்த வீடியோவை பத்திரிக்கையாளர் டியாகோ ஓர்டினோலா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |