Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒவ்வொருவர் தலையிலும் இவ்வளவு கடனா?… அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் நம் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.71, 250 கடன் சுமை இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

தமிழக அரசின் கடன் சுமை தற்போது ரூ.5.7 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் அரசின் கடன் ரூ.1,13,340 கோடி அதிகரித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிந்து ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபோது அரசின் கடன் ரூ.1,01,430 கோடியாக இருந்தது தற்போது ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. அதன் அடிப்படையில் நம் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.71,250 கடன் சுமை உள்ளது. இது இல்லாமல் மத்திய அரசின் கடன் சுமை தனியாக உள்ளது. இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |