Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் ஏலத்தில் கண்ணுக்கு தெரியாத வீரர்… இப்போ இவரு தான் கெத்து… மிஸ் பண்ணிட்டீங்களே…!!!

ஐபிஎல் ஏலத்தில் யாரும் கண்டுகொள்ளாத வீரரை இந்திய அணியின் பந்து வீச்சாளர் அஸ்வின் பாராட்டியுள்ளார்.

தற்போது நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கான வீரர்களை தேர்ந்தெடுக்க அணியின் உரிமையாளர்கள் தங்கள் அணியின் வீரர்களை தேர்ந்தெடுத்தனர். அவ்வாறு நடைபெற்ற ஏலத்தில் கண்டுகொள்ளப்படாத நியூசிலாந்தை சேர்ந்த வீரரான ‘டேவன் கான்வோ ‘பற்றி இந்திய அணியின் பந்து வீச்சாளரான அஸ்வின் கூறியுள்ளார் .

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அங்கு நடைபெறும் டி20 போட்டிக்காக விளையாடுகிறது. அவ்வாறு இந்த இரண்டு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 53 ரன்களில் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 184 ரன்களுக்கு 5 விக்கெட் வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக ஆடிய அந்த அணியின் வீரர்கள் ‘டேவன் கான்வோ’ 59 பந்துகளில் 99 ரன்கள் அடித்து சிறப்பாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனை பாராட்டும் வகையில் இந்திய பந்து வீச்சாளர் அஸ்வின்’ நான்கு நாட்கள் தாமதமாக அடித்து விட்டீர்களே.!’ என்று அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்து, அவரை பாராட்டியுள்ளார் . ஆனால் அவரை எந்தவொரு ஐபிஎல் அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிக்கத்தக்கது.

Categories

Tech |