சுவிட்சர்லாந்தில் 2020ஆம் ஆண்டு மட்டும் 1,282 பேர் தங்கள் விருப்பத்தின் பேரில் மருத்துவர்களின் உதவியுடன் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்வதற்க்காக கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த 2019 ஆம் ஆண்டை விட தற்போது அதிகரித்துள்ளது.
சுவிஸில் வாழும் ஜெர்மன் மற்றும் இத்தாலி மொழி பேசும் 913 பேர் தங்கள் விருப்பத்தின் பேரில் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் 369பேர் கருணை கொலை செய்யப்பட்டுள்ளனர்.மேலும், சூரிச்சில் 312 பேரும்,பெர்னில் 133 பேரும்,ஆர்கூவில் 44 பேரும் கருணை கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இப்படி வெளிநாட்டவர்களை தங்கள் விருப்பத்தின் பேரில் கருணை கொலைக்கு அனுமதிப்பதால் சுவிஸ் “தற்கொலை சுற்றுலா” என்ற விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.