Categories
தேசிய செய்திகள்

புதுவையில் ஆளுநர் ஆட்சி…. தமிழிசை பரிந்துரை – வெளியான தகவல்…!!

புதுச்சேரியில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்த உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பதவி ராஜினாமா செய்ததையடுத்து நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்குமாறு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் முதல்வர்  நாராயணசாமிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று நடந்த சட்டப்பேரவையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவி விலகியது.

இந்நிலையில் புதுச்சேரியில் ஆளுநர் ஆட்சி அமல் படுத்த உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட உள்துறை அமைச்சகம் விரைவில் முறைப்படி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |