மத்திய பிரதேச மாநிலத்தில் கணவனை விவாகரத்து செய்து வேறு நபரை திருமணம் செய்யவிருந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான நீலம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்துள்ளார். இதற்கிடையில் ரவி என்பவருடன் நட்பு கொண்டு அவரை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் நீலம் சில தினங்களுக்கு முன் காணாமல் போனார் .புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் நீலம் கழிவுநீர் தொட்டியில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். அவர் உடம்பில் அதிக நகைகள் இருந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு ரவியின் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரித்ததில் ரவி குற்றத்தை ஒப்புக்கொண்டார். நீலமை கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். வாக்குமூலத்தில் அவர் கூறியது , நீலமுக்கு வேறொரு நபர்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி இருவருக்கிடையில் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ரவி நீலமை ஆத்திரத்தில் இரு தினங்களுக்கு முன்பு கொலை செய்து கழிவுநீர் தொட்டியில் போட்டதாக ஒப்புக்கொண்டார். போலீசார் சம்பவம் குறித்து ரவியை கைது செய்தனர்.