கஜானாவை காலிசெய்தும் கூட பழனிசாமி மற்றும் எடபடியின் கோரப்பசி அடங்கவில்லை என்று ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். தமிழக அரசின் கடன் சுமை தற்போது ரூ.5.7 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில்கஜானாவை முற்றிலும் காலிசெய்தும் கூட பழனிசாமி பன்னீர்செல்வத்தின் கோரப்பசி அடங்கவில்லை என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் 2006 – 2011 வரையிலான திமுக ஆட்சியில் வாங்கப்பட்ட 44,084 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 3.55 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. மக்கள் வரிப்பணம் ரூபாய் 1000 கோடியையை வாரி இறைத்து விளம்பரம் செய்துள்ளனர். பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூபாய் 62 லட்சத்து 20 ஆயிரம் கடன் சுமை உள்ளது என்று கூறியுள்ளார்.