Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதில்…. பெட்ரோல்-டீசல் விலையை குறைங்க… ராமர் சந்தோஷப்படுவார் – கடும் கண்டனம்…!!

ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதிலாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று சிவசேனாவின் சாம்னா பத்திரிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய பட்ஜெட் தாக்கலின்போது செஸ் வரி என்ற வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்ந்தது. இதனால் பெட்ரோல் டீசல் விலை கடும் உச்சத்தை தொட்டது. இதையடுத்து வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்குமாறு நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகளும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதிலாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும். இதனால் பக்தர்களுக்கு உணவு கிடைக்கும். மேலும் ராமரும் சந்தோஷப்படுவார் என்று சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னா பெட்ரோல் டீசல் விலை உயர்வு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Categories

Tech |