Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நார்ச்சத்துக்கள் நிறைந்த பேபி கார்னில்… ருசியான ரெசிபி செய்து… மாலை நேர ஸ்னாக்ஸாக செய்து கொடுங்க..!!

பேபி கார்ன் புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:

சீரக சம்பா அரிசி           – 1 கப்
முந்திரி, ஏலக்காய்      – சிறிதளவு
பிரிஞ்சி இலை               – 4
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம்      – 1
பேபி கார்ன்                       – 1 கப்
ஆயில்                                 – 1 குழிகரண்டி
உப்பு                                      –  ருசிக்கேற்ப
கொத்தமல்லி தழை     – ஒரு கொத்து

அரைக்க:

தேங்காய்                           – 1/2 கப்
பட்டை , லவங்கம்        – 3
சோம்பு                                – சிறிதளவு
பச்சை மிளகாய்              – 2

செய்முறை:

முதலில் தேங்காய், பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், கொத்தமல்லி தழை, இஞ்சி, பூண்டை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.  பின்பு மிக்சிஜாரில் நறுக்கிய தேங்காய், பட்டை, லவங்கம், சோம்பு, நறுக்கிய பச்சை மிளகாய்யை போட்டு மையாக அரைத்து பேஸ்ட் போல் எடுத்துக் கொள்ளவும்.

மேலும் அதே மிக்சிஜாரில் நறுக்கிய இஞ்சி, பூண்டை மையாக அரைத்து விழுது போல் எடுத்து கொள்ளவும். பிறகு சீரக சம்பா அரிசியை ஒரு பாத்திரத்தில் எடுத்து, தண்ணீரால் சுத்தம் செய்தபின், அதனுடன் அரைத்து வைத்த 1 கப் தேங்காய் மசாலா கலவையை ஊற்றியபின், 1 கப் தண்ணீர் ஊற்றி, கால் மணி நேரம் நன்கு ஊற வைத்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் குக்கரை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், முந்திரி, ஏலக்காய், பிரிஞ்சி இலையை போட்டு தாளித்ததும், அரைத்த இஞ்சி பூண்டு விழுதைபோட்டு நன்கு வதக்கி கொள்ளவும்.

பின்பு இஞ்சி பூண்டு விழுது நன்கு வதங்கியதும், அதனுடன் நறுக்கிய வெங்காயம், சோளத்தை போட்டு நன்கு வதக்கியபின், அதில் ஊறவைத்த சீரக சம்பா அரிசியை, தேங்காய் கலவையுடன் ஊற்றிகொள்ளவும்.

இறுதியில் அதனுடன், ருசிக்கேற்ப உப்பு தூவி, நறுக்கிய கொத்தமல்லி தழையை சேர்த்து, லேசாக கிளறிவிட்டபின், மூடி வைத்து, 3 விசில் வந்ததும் இறக்கி வைத்து சூடாக பரிமாறினால், ருசியான பேபி கார்ன் புலாவ் ரெடி.

Categories

Tech |