Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரு ஆதாரம் கெடச்சிருக்கு… அவங்களுக்கு இதுல சம்மந்தம் இருக்குமா… போலீசாரின் தீவிர விசாரணை…!!

கோவில் குளத்தில் இருந்து ஏழு சிலைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்டகாமுத்தூர் சாலையில் புட்டுவிக்கி குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் சாமி சிலைகள் கிடந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக தாசில்தார் முத்துக்குமாருக்கும், பேரூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார் உத்தரவின்படி, அதிகாரிகள் குளத்தில் இருந்த 7 சிலைகளையும் மீட்டனர். அங்கிருந்து உலோகத்தால் செய்யப்பட்ட 1/2 அடி முதல் 1 1/2 அடிவரை கொண்ட விநாயகர், சரஸ்வதி, லட்சுமி, கிருஷ்ணர், கருமாரியம்மன், விஷ்ணு, துர்கை ஆகிய ஆறு சிலைகளும், கருங்கல்லால் செய்யப்பட்ட 2 அடி கருமாரி அம்மன் சிலை ஒன்றும் மீட்கப்பட்டது.

இந்த சிலைகள் தாலுகா அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சிலைகளின் உண்மைத் தன்மை மற்றும் பழமை குறித்து ஆய்வு செய்வதற்காக தொல்லியல் துறைக்கு அனுப்பப்படவிருக்கிறது. இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறும்போது, குளத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்த கோவில் சிலைகள் ஏதாவது ஒரு கோவிலில் இருந்து கடத்தப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் ஒரு சிவப்பு பை ஒன்றை இந்த சிலைகள் மீட்கப்பட்ட இடத்திலிருந்து எடுத்ததாகவும், அந்த பைபிள் சிவப்பு நிற ஆதிபராசக்தி கோவிலுக்கு அணிந்து செல்லும் மாலை ஒன்று இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் வேறு ஏதும் சிலைகள் காணாமல் போய் விட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சாமி சிலைகள் குளத்தில் வீசப்பட்டதற்கான காரணம் என்ன என்றும், ஏற்கனவே ஐம்பொன் சிலைகளை விற்பனை செய்ய முயன்று கைதான ஐந்து பேருக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |