12 ஆம் வகுப்பு முடித்த திருமணமாகாத பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என்று பீகார் அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் நேற்று சட்டப்பேரவை தேர்தல் 2021 – 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான கிஷோர் பிரசாத் தாக்கல் செய்தபோது திருமணமாகாத பெண்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் 25 ஆயிரம் ரூபாயும், இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு ரூபாய் 110 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக மூன்று மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்றன. கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்புக்காக ரூபாய் 500 கோடி ஒதுக்கப்படும் என்றும் அனைத்து கிராமங்களிலும் சோலார் மின் விளக்குகள் பொருத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.