Categories
மாநில செய்திகள்

அண்ணே! கைய தட்டுங்க…. பட்ஜெட் உரையில்…. கேட்டு வாங்கிய ஓபிஎஸ்…!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

இதையடுத்து பட்ஜெட் உரையை ஓபிஎஸ் வாசித்துக் கொண்டிருந்தபோது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை குறித்தும் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து வசித்து கொண்டிருந்தார். அப்போது தமிழக அரசு மற்றும் தனியார் நிலங்களில் 6.2 கோடி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வருவதாக தெரிவித்துள்ளார். அப்போது ஒரு சிலர் மட்டுமே தன்னுடைய கைகளை தட்டி உள்ளனர் இதையடுத்து பேச்சை நிறுத்திய ஓபிஎஸ் கைதட்டுங்கண்ணே! கைதட்டுங்கண்ணே! என்று கூறியுள்ளார். இதனால் அனைவரும் கரவொலி எழுப்பியுள்ளனர்.

Categories

Tech |