அதிருப்தி MLA_க்களை சந்திக்க விடாமல் போலீஸ் எந்த படையையும் குவிக்கட்டும் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு அரங்கேறிய வண்ணம் இருந்து வருகின்றது. ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளமும் , ஆட்சியை கவிழ்க்க பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு மும்பை விடுதியில் தங்கி இருக்கும் 14 சட்டமன்ற உறுப்பினர்களை எப்படியாவது சமாதான படுத்திவிட காங்கிரஸ் முயன்று வருகின்றது.
அதே போல விடுதியில் தங்கி இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து ஆட்சியை கவிழ்த்து விட வேண்டுமென்ற அனைத்து முயற்சிகளையும் பாஜக செய்து வருகின்றது. இந்நிலையில் விடுதியில் உள்ள அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து சமாதானம் செய்ய காங்கிரஸ் அமைச்சர் சிவகுமார் மும்பை விரைந்துள்ளார். அங்குள்ள விடுதியில் அமைச்சர் நுழைய போலீசார் அனுமதி மறுத்ததாக தெரிகின்றது.
இது குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவகுமார் கூறுகையில் , மும்பை போலீசார் அல்லது வேறு எந்த படைகளும் குவிக்கட்டும் , அவர்களது பணியை அவர்கள் செய்யட்டும். நாங்கள் எங்களின் நண்பர்களை சந்திக்க வந்துள்ளோம். அரசியலில் ஒன்றாக பிறந்தவர்கள் நாங்கள். ஒன்றாகவே அரசியலில் இறப்போம். அவர்கள் எங்களது கட்சிக்காரர்கள். அவர்களை சந்திக்க நாங்கள் வந்துள்ளோம் என்று கூறினார்.