வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திடீரென மதுபோதையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வாலிபர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து திருமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.