Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மூட்டு வாதத்தை சரிபடுத்த கூடிய காளானில்… எளிதில் செய்ய கூடிய… இந்த ரெசிபிய… குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்க..!!

காளான் டோஸ்ட் செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை பிரட்     – 4 துண்டுகள்
சீஸ்                              – 2 கட்டிகள் (துருவியது)
காளான்                      – 8 (நறுக்கியது)
வெங்காயம்             – 1 (நறுக்கியது)
குடைமிளகாய்       – 1 (நறுக்கியது)
தக்காளி                     – 1 (நறுக்கியது)
எண்ணெய்                – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு                             – தேவையான அளவு

செய்முறை:

முதலில் காளான், வெங்காயம், குடைமிளகாய், தக்காளி எடுத்து தண்ணீரில் சுத்தம் செய்து தேவையான வடிவத்தில் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு சீஸ் துண்டுகளை எடுத்து கேரட் துருவியில்

பிறகு அடுப்பில் தோசைக் கல்லை வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிரட் துண்டுகளைப் போட்டு, பொன்னிறமாக வேக வைத்து திருப்பி போட்டு சிவக்க வேக வைத்து  டோஸ்ட்டாக எடுத்து கொள்ளவும்.

பின்னர்  கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி , நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், காளான் சேர்த்து சில நிமிடம் நன்கு பொன்னிறமாக வதக்கியபின், அதில் ருசிக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறியபின் இறக்கி வைக்கவும்.

மேலும் கிளறி விட்ட கலவையை எடுத்து, டோஸ்ட் செய்த பிரட் துண்டில் வைத்து, அதன்மேல் துருவிய சீஸை தூவிவிட்டபின், மைக்ரோவேவ் ஓவனில் வைத்து, சில நிமிங்கள் துருவிய சீஸானாது நன்கு உருகும் வரை வைத்ததும்  எடுத்து, அதன் மேல் தக்காளி சாஸை ஊற்றி பரிமாறினால், ருசியான காளான் டோஸ்ட் ரெடி.

Categories

Tech |