புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரை செய்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதால் காங்கிரஸின் பலம் குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி நேற்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இந்நிலையில் புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தபடுவதை உள்துறை அமைச்சகம் விரைவில் முறைப்படி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.