Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கட்டணம் உயர்வு – பெரும் அதிர்ச்சி …!!

மருத்துவ மேற்படிப்பு (பிஜி) படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான  நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி மருத்துவ மேற்படிப்பு நுழைவு தேர்வு ( நீட் ) நடைபெற இருக்கிறது.இந்த ஆண்டு தேர்வுக்கான நோட்டிபிகேஷன் வந்திருக்கிறது. மாலை மூன்று மணியில் இருந்து மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.  அந்த விவரங்களை பார்க்கும் போது தான் இந்த கட்டண உயர்வு என்பது தெரிய வந்துள்ளது.

எஸ்சி/எஸ்டி பிரிவினர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த முறை 2,750 ரூபாய் மட்டும் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு 3,835 ரூபாயாக  அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் ஒரு நபருக்கு 10 85 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.  அதேபோல ஓபிசி என்ற பொதுப்பிரிவினருக்கு கடந்த முறை 3750  வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது 5015 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நபர் ஒன்றுக்கு கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 1,765 ரூபாயை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதில் ஜிஎஸ்டியும் விதிக்கப் பட்டிருக்கின்றது. பொதுப்பிரிவினருக்கு 765 ரூபாய் ஜிஎஸ்டியாகவும்,  எஸ்சி ? எஸ்டி பிரிவினருக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கும் 585 ரூபாய் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு இருக்கின்றது. ஆகமொத்தம் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனிநபர்களின் நுழைவு கட்டணம் என்பது தற்போது அதிகரிக்கப்பட்டு இருப்பதை பார்க்க முடிகின்றது. இது நாடு முழுவதும் இந்த தேர்வை எழுத உள்ளவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Categories

Tech |