Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வங்கக் கடலில் காற்றழுத்ததாழ்வு நிலை… பரவலாக மழை… பொதுமக்கள் குளிக்க தடை…!!

குற்றாலத்தில் கனமழை பெய்துவருவதால் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி, நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் நான்குநேரி, களக்காடு, அம்பை போன்ற பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. மேலும் பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

மேலும் குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் இரவிலிருந்து கனமழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 120.45 அடியாக உயர்ந்துள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 143 அடி ஆகும்.

Categories

Tech |