Categories
சினிமா தமிழ் சினிமா

விஷ்ணு விஷால் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்… படக்குழு அறிவிப்பு…!!!

நடிகர் விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’ படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது .

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் எஃப்ஐஆர், காடன் ஆகிய படங்கள் தயாராகியுள்ளது . இதையடுத்து இவர் இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் ‘மோகன்தாஸ்’ படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் . இந்த படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நடிகர் விஷ்ணு விஷால் தயாரிக்கிறார்.

மோகன் தாஸ் படக்குழு வெளியிட்ட போஸ்டர்

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் இணைந்துள்ளதாக  படக்குழு அறிவித்துள்ளது . இவர் தமிழில் ‘நரகாசுரன்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார் ‌. இந்த படம் இன்னும் வெளியாகவில்லை . மேலும் இவர்  கௌதம் மேனன் இயக்கிய ‘குயின்’  வெப் தொடரில் எம்.ஜி.ஆராக நடித்திருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |