கனடாவில் 3 வயது சிறுமி கஞ்சா மிட்டாய் சாப்பிட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் தந்தை கைது செய்யப்பட்டார் .
கனடாவில் குய்ண்டே வெஸ்ட் என்ற பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை அன்று அளவுக்கு அதிகமாக கஞ்சா மிட்டாய் சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறுமியின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
வரும் மார்ச் 8ஆம் தேதி இந்த வழக்கு குறித்து சிறுமியின் தந்தை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், சிறுமி எவ்வளவு கஞ்சா மிட்டாய் சாப்பிட்டார் என்று தெரியவில்ல என்று கூறினார். மேலும் வேறு யாரேனும் சிறுவர்கள் இந்த மாதிரி கஞ்சா மிட்டாய் சாப்பிட்டு இருப்பது தெரிந்தால் 911 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்று கூறினார்.