புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியால் தான் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துள்ளது என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசியபோது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியால் தான் புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததுள்ளது. இது போன்ற காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற கொள்கைபடி தென் மாநிலத்தில் பாஜகவுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.
மேலும் காங்கிரஸ் தற்போது இந்தியாவில் இல்லை என்றாலும் ஒரு சில இடங்களில் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் இதற்கு முன்பாக நேற்று முன்தினம் புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்து நின்றுள்ளது.