வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய தனியுரிமை கொள்கை மே 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த மாதம் வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. தனிநபர் குறித்த தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கில் வெளியிடப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியது.
இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய தனியுரிமை கொள்கை மே 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. மே 15ஆம் தேதிக்கு பிறகு 120 நாட்களுக்குள் பயனர்கள் புதிய தனியுரிமைவிதிமுறைகள் ஏற்கவில்லை என்றால் அவர்களின் கணக்கு நீக்கப்படும் என எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.