பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை மற்றும் 80 ஆயிரம் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள சித்தாலை கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தர்ராஜ். இவர் தமிழ்நாடு திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சுந்தர்ராஜ் நேற்று வேலைக்கு சென்ற பின்னர் ஜெயலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு குழந்தைகளுடன் வெளியே சென்றுள்ளார். அதன்பின் அவர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகையும் 50 ஆயிரம் ரூபாய் பணமும் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஜெயலட்சுமி சுந்தர்ராஜனுக்கு தகவல் அளித்துள்ளார். அதன்பின் சுந்தர்ராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். கைரேகை நிபுணர்கள் சில தடயங்களை சேகரித்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக துணை சூப்பிரண்டு வினோதினி தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நடத்திய விசாரணையில் வீட்டின் கதவு உடைக்கப்படாமல் திறந்து இருந்ததால் சாவி இருக்கும் இடத்தை அறிந்த ஒருவரே இந்த சம்பவத்தை செய்திருக்க முடியும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இதுகுறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.