Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி-நெல்லை இடையே… இரட்டை அகல ரயில் பாதை… ஆய்வு செய்ய வருகிறார் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர்…!!

கோவில்பட்டி-நெல்லை இடையேயான இரட்டை அகல ரயில் பாதையை ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஆய்வு செய்யவுள்ளார்.

மதுரை கோட்டத்தில் மதுரையிலிருந்து தூத்துக்குடி மற்றும் நெல்லை இரட்டை அகல ரயில் பாதை பணி தற்போது நடந்து வருகிறது. இதில் மணியாச்சி, தட்டப்பாறை, கங்கைகொண்டான் இடையே பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது. மேலும் இது ரயில்வே பாதுகாப்பு கமிஷனரின் ஒப்புதலின் பேரில் போக்குவரத்துக்கு தயாராக இருக்கிறது.

இதற்கிடையே கோவில்பட்டி கடம்பூர் இடையே மின்மயமாக்கப்பட்ட இரட்டை அகல ரயில் பாதையை பெங்களூருவில் உள்ள ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் வருகிற 26-ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஆய்வு செய்ய உள்ளார். அதன்படி அவர் 26ஆம் தேதி கோவில்பட்டி கடம்பூர் இடையே மின்மயமாக்கப்பட்ட இரட்டை அகல ரயில் பாதையை ஆய்வு செய்கிறார். அதன்பின் 27ஆம் தேதி கங்கைகொண்டான் நெல்லை இடையே மின்மயமாக்கப்பட்ட இரட்டை அகல ரயில் பாதையை ஆய்வு செய்யவுள்ளார் அதன்பின் 28ஆம் தேதி புதிதாக போடப்பட்டுள்ள அகல பாதையில் வேக சோதனை நடத்தவுள்ளார்.

Categories

Tech |