வீரர்களின் திறனை பார்க்கவேண்டுமே தவிர பிட்சை குறித்து விவாதிப்பது தேவையற்றது என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா சரமாரியாக பேசியுள்ளார் .
சென்னை பிட்ச் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், பேட்ஸ்மேன்கள் விளையாட முடியாத வகையில் மோசமாக இருந்ததாகவும் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சித்து இருந்தனர். இது குறித்து பேசிய ரோகித் சர்மா, பிட்ச் இரு அணிகளுமே பொதுவாகவே தயார் செய்யப்பட்டதாகவும், ஏன் இதைப்பற்றி விவாதிக்கப்படுகிறது ? எனவும் தெரியவில்லை எனவும் ஆதங்கமாக தெரிவித்தார் .