Categories
சினிமா தமிழ் சினிமா

“அச்சு அசல் அம்மாவைப் போல் இருக்கும் மகள்”…. வைரலாகும் பிரபல நடிகையின் மகள் புகைப்படம்..!!

80ஸ், 90ஸ் காலங்கதில் இருந்து தனது குடும்ப பாங்கான அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தேவயானி. அந்த அளவிற்கு கமல், அஜித், விஜய் போன்ற அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார்.

கொஞ்சம் கூட கிளாமர் இல்லாமல் குடும்ப பாங்கான நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர். பல விருதுகளையும் பெற்றுள்ளார். சினிமாவில் மட்டுமல்லாது அதன் பிறகு சீரியல்களிலும் தேவயானி முன்னணி இடம் வகித்தார். 90ஸ் கிட்ஸ்களில் பலருக்கு கோலங்கள் சீரியல் இன்றைக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கின்றது.

பிரபல இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . மும்பையில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் தமிழ் இயக்குனரை காதலித்து கரம் பிடித்தார். இவர்களுக்கு அழகான இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ஊரடங்கு நேரத்தில் கூட மகள்களுடன் தேவயானி சிலம்பம் பயின்று வந்தார்.

அதன் புகைப்படங்களும் சில வாரங்களுக்கு முன்பு இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்து என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட நடிகை தேவயானியின் குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. காரணம் நன்றாக வளர்ந்துவிட்ட அவரது மகள் அச்சு அசல் அவரை போலவே இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |