சந்தேகத்தால் காதலியை கத்தியால் குத்தி கொன்று விட்டு காதலன் தற்கொலை செய்துள்ளார்.
பிரிட்டனில் John Lee Morris(32) மற்றும் அவரது காதலி Niki Campbel(30) ஆகிய இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர்களின் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு Morris-ம் Niki -ம் இறந்து கிடந்துள்ளனர். Niki-யின் உடலில் கத்தியால் குத்திய காயங்கள் இருந்துள்ளது.
இந்நிலையில் காவல்துறையினருக்கு தகவல் அளித்த பின்பு இருவரது உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பரிசோதனையின் முடிவில் Morris அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், இந்த சம்பவம் நடப்பதற்கு முந்தைய தினம் மதுபான விடுதியில் வைத்து காதலர்கள் இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. Niki-க்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக மோரிஸ் சந்தேகப்பட்டு Niki-யிடம் சண்டையிட்டுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பிய பிறகு Niki -ஐ கத்தியால் குத்திக் கொன்று விட்டு குற்றவுணர்ச்சியால் அவரும் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உண்டு தற்கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது.