திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் திருமண நிதி உதவி வழங்கும் திட்டம் கலெக்டர் அலுவலக அரங்கில் வைத்து நடைபெற்றுள்ளது. இதில் பட்டப்படிப்பு முடித்த 331 பெண்களுக்கு தலா 50000 ரூபாயும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் 10 முதல் 12 வகுப்பு படித்த பெண்களுக்கு 226 பெண்களுக்கு தலா 25000 ரூபாயும் அரை கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவர் ராஜசேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து வரவேற்புரை ஆற்றியுள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி தாசில்தார் பிரபாகரன், அ.தி.மு.க நகர செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், நகர மன்ற முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்