சமீபத்தில் நண்பேண்டா வாட்ஸப் குழுவின் நண்பர்கள் சந்திப்பு சென்னையில் நடந்த போது கலந்துகொள்ளாத வடிவேலு வந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதையடுத்து அவர் பேசியபோது “உள்ளத்தில் நல்ல உள்ளம்” பாடலை பாடி வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என்ற வரி வந்தபோது கண்கலங்கினார். இதையடுத்து சற்று நேரம் அமைதியாக நின்று அவரை பார்த்து மற்றவர்களும் கண்கலங்கியுள்ளனர்.
இந்நிலையில் மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “வடிவேலுவின் லேட்டஸ்ட் பேட்டியை நான் பார்த்தேன். வஞ்சத்தில் வீழ்ந்தாயடா? என்று ரொம்ப பீல் பண்ணி பேசினார். நிறைய பேர் நடிப்பு என்றால் என்னவென்று தெரியாமல் ஹீரோவாக இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய சொந்த தயாரிப்பில் நிறைய பிராஜெக்ட் செய்து வருவதாகவும் அந்த படத்தில் நடிக்க உங்களுக்கு விருப்பம் இருந்தால் அது எனக்கு கௌரவம்.