முதலமைச்சர் இபிஎஸ் என்பதற்கு பதிலாக ஓபிஎஸ் எனக்கூறி அமைச்சர் செல்லூர் ராஜூ தடுமாறி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சட்டம் ஒழுங்கு பற்றி கேட்டதற்கு ஹிட்லர் ஆட்சியில் இப்படித்தான் நடந்தது என கூறி மேற்கோள்காட்டி பதிலளித்தார். சசிகலாவின் அரசியல் பிரவேசம் குறித்து பேச மறுத்த அவர், கொரோனா காலத்தில் சிறந்த முறையில் பணியாற்றினார் முதலமைச்சர் ஈபிஎஸ் என்பதற்கு பதிலாக முதலமைச்சர் ஓபிஎஸ் என கூறி பதற்றத்தில் தடுமாறினார்.
மேலும் அவர் பேசும் போது, முதலமைச்சர் கொரோனா காலத்தில் தன் உயிரை பொருட்படுத்தாது நமக்காக வந்து வேலை பார்த்தார். ஒவ்வொரு மாவட்டமாக வந்தார். இந்தியாவில் எந்த முதலமைச்சரும் நேரடியாக சென்று ஆய்வு பணிகளை செய்ததில்லை.