இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் உபுல் தரங்கா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் உபுல் தரங்கா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “15 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் நான் மேற்கொண்ட பயணத்தில் இருந்து தற்போது நான் ஓய்வு பெறுகிறேன். என்னுடைய எல்லா நிலைகளிலும் ஆதரவாக இருந்த என்னுடைய ரசிகர்களுக்கும், என்னுடைய நண்பர்களுக்கும் நன்றி” என்று அவர் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த திடீர் ஒய்வு அறிவிப்பால் அவருடைய ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.