பட்டப்பகலில் மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலியை வாலிபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கதிர்வேல் நகரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது, சுமார் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் அப்பகுதியில் நடந்து சென்றுள்ளனர்.
அவர்கள் திடீரென அந்த மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து அவர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சிப்காட் போலீசார் மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.