Categories
தேசிய செய்திகள்

வாங்க ருசிக்கலாம்…. கழுத்தை இறைச்சி விற்பனை அமோகம்…!!

பொதுவாக நாம் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி தான் அதிகமாக விரும்பி சாப்பிட்டு வருகிறோம். இதன் மூலம் நமக்கு தேவையான புரதச் சத்துக்கள் கிடைத்து வருகிறது . ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது ஒரு சில கெடுதல்களும் ஏற்படுகிறது என்பது நமக்கு தெரியும். எனவே எதையும் அளவோடு சாப்பிட வேண்டும். பெரும்பாலும் நாம் கழுதையை சுமை சுமப்பத்திற்கு மட்டும் தான் பயன்படுத்துவார்கள். கழுதைகளை இப்போதெல்லாம் காண்பது அரிதாக இருக்கிறது.

இந்நிலையில் ஆந்திராவில் கழுதை விற்பனை அதிகரித்து வருகிறது. கழுதை இறைச்சியை உண்டால் வலிமையும், வீரியமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்தும் கழுதைகள் சட்டவிரோதமாக கொண்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

Categories

Tech |