240 ரன் என்ற வெற்றி இலக்கை சந்தேகமில்லாமல் இந்திய அணி எட்டிப் பிடித்துவிட முடியும் இது பெரிய ஸ்கோர் அல்ல என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி 239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.
இந்திய அணியின் தோல்விக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறுகையில் , 240 ரன் என்ற வெற்றி இலக்கை சந்தேகமில்லாமல் இந்திய அணி எட்டிப் பிடித்துவிட முடியும். இது பெரிய ஸ்கோர் அல்ல. தொடக்கத்திலேயே மூன்று முக்கிய விக்கெட்டுகளை நியூசிலாந்து வீரர்கள் வீழ்த்தி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தார்கள்.எப்போதும் தோனி வந்து போட்டியை முடித்துக் கொடுப்பார் என்பது சரியானதல்ல என்று சச்சின் தெரிவித்துள்ளார்.